பிரதமரை அவமதிக்கும் போதெல்லாம் காங்., துடைத்தெறியப்படும்; அமித் ஷா
31 ஐப்பசி 2025 வெள்ளி 06:31 | பார்வைகள் : 563
பிரதமர் மோடியை அவமதிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும், பீஹார் தேர்தலுக்குப் பிறகு மஹா கூட்டணி காணாமல் போய்விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலையொட்டி, லக்கிசராயில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அவர் பிரதமரை மட்டுமல்ல, சத்தி மாயாவையும் (சூரிய கடவுள்) இழிவுபடுத்தியுள்ளார். சத்தி மாயாவை வழிபடுபவர்களை நாடகமாடுபவர்கள் என்று ராகுல் கூறுகிறார். சூர்ய கடவுளின் முக்கியத்துவத்தையும், நம்பிக்கையையும் நீங்களும், உங்கள் தாயாரும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.
பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமான வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள். கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பாருங்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பினர். அப்போதெல்லாம், காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் மோடியின் தாயாரை அவமதித்தனர். நீங்கள் மோடியை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள். மேலும், நீங்கள் சூரியகடவுளையும் தற்போது அவமதித்துள்ளீர்கள்.
நவம்பர் 14ம் தேதி பெட்டிகள் (ஓட்டு எண்ணிக்கை) திறக்கப்படும் போது, உங்கள் கூட்டணி முழுவதுமாக துடைத்தெறியப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan