Paristamil Navigation Paristamil advert login

யூடியூப்பில் வந்த சூப்பர் அப்டேட்! பழைய வீடியோக்களை 4K, HD ஆக மாற்ற முடியும்

யூடியூப்பில் வந்த சூப்பர் அப்டேட்! பழைய வீடியோக்களை 4K, HD ஆக மாற்ற முடியும்

30 ஐப்பசி 2025 வியாழன் 16:49 | பார்வைகள் : 169


பழைய மற்றும் புதிய வீடியோக்களை AIஐக் கொண்டு 4K, HD தரத்திற்கு மாற்றும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

பிரபல யூடியூப் நிறுவனம் பார்வையாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புதிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, பழைய Low quality வீடியோக்களை AI மூலமாக Automatic ஆக HD வீடியோக்களாக மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது.

யூடியூப்பில் 144p, 240p, 360p, 480p, 720p போன்ற தரங்களில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து நாம் வீடியோக்களைப் பார்க்கலாம்.

ஆனால், தற்போது 4K தரம் வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், பெரும்பாலானோரின் தேர்வு என்பது 1080p மற்றும் அதற்கு மேலான தரம்தான்.

இதற்காக 1080p தரத்திற்கும் குறைவாக பதிவிடப்பட்டுள்ள பழைய வீடியோக்கள் மற்றும் இனி பதிவிடவுள்ள புதிய வீடியோக்கள் போன்றவற்றை AI மூலமாக யூடியூப் தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. 4K, HD மற்றும் Ultra HD வரைக்கும் AIஐக் கொண்டு வீடியோக்களின் தரத்தை யூடியூப் உயர்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு Settings பகுதியில் உள்ள Super Resolution என்ற Optionஐ தேர்வு செய்து, ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் யூடியூப் நிறுவனமே வீடியோக்களை Automatic ஆக தரம் உயர்த்திக் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீடியோக்களை தரம் உயர்த்த சம்மதம் தெரிவிக்கும் கணக்குகளுக்கு மட்டுமே, இந்த சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்