Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நடைபெற்றுவரும் ராம் சரணின் ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பு!

இலங்கையில் நடைபெற்றுவரும் ராம் சரணின் ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பு!

30 ஐப்பசி 2025 வியாழன் 15:36 | பார்வைகள் : 226


சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஸ்ரீலங்காவில் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’, மோகன்லால் மற்றும் மம்மூட்டி நடிக்கும் ‘பேட்ரியாட்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெற்றிருந்தன.

அந்த வரிசையில், தற்போது இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின் புதிய ஷெட்யூல் இலங்கையில் தொடங்கியுள்ளது.ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்காக இலங்கையில் உள்ள புகழ்பெற்ற குகை ரயில் பாதை ஒன்றை லொகேஷனாக தேர்வு செய்துள்ளனர்.

அங்கு சில முக்கியமான காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் எடுத்த புகைப்படங்களை பெத்தி படக்குழுவினர் தற்போது பகிர்ந்து வருகிறார்கள். இப்படம் 2026 மார்ச் 27ம் தேதி, ராம் சரண் பிறந்த நாளன்று திரைக்கு வரவுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்