Paristamil Navigation Paristamil advert login

கதாநாயகனாக நடிக்கும் ‘ஸ்டார்’ பட இயக்குனர்....

கதாநாயகனாக  நடிக்கும் ‘ஸ்டார்’ பட இயக்குனர்....

30 ஐப்பசி 2025 வியாழன் 15:36 | பார்வைகள் : 222


கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் இயக்குனர் இளன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இவர் இயக்கிய ‘ஸ்டார்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இந்தப் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதன் பின்னர் இளன், தனுஷிடம் கதை சொன்னதாக பல தகவல்கள் வெளியானது. அதன் பிறகு இந்த படம் தொடர்பான மற்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் தான் இயக்குனர் இளன் புதிய படம் ஒன்றை தானே இயக்கி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது.

மேலும் இந்த படத்திற்கு ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சான்வி மேகனா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.சான்வி மேகனா, மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்