மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம்
30 ஐப்பசி 2025 வியாழன் 15:36 | பார்வைகள் : 170
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடியனாக தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். அதன் பின்னர் கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன்பாக ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சந்தானம், விஷாலுடன் இணைந்து காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் பல வருடங்களுக்கு பின்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது இதன் காரணமாக சந்தானத்தை மீண்டும் காமெடியனாக திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது.
ஆனால் அந்த ரோல் காமெடி ரோலா? அல்லது மற்றொரு ஹீரோ ரோலா? என்பது போன்ற உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சந்தானம், ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் காமெடியனாக நடிக்கப் போகிறார் என்று பேச்சு அடிபட்டது.ரஜினிக்காக மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பும் சந்தானம்!அதன் பிறகு இது குறித்த தகவல் எதுவும் வெளிவராத நிலையில், கோவாவில் நடைபெற இருக்கும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் சந்தானத்தின் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் சந்தானம் ரஜினியுடன் இணைந்து ‘லிங்கா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் மீண்டும் ரஜினியுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


























Bons Plans
Annuaire
Scan