சுவிஸ் நகரமொன்றில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்
30 ஐப்பசி 2025 வியாழன் 10:51 | பார்வைகள் : 2999
சுவிஸ் நகரமொன்றில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஒருத்தி திடீரென உயிரிழந்த விடயம் அங்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Schaffhausen நகரத்தில், கால்பந்து விளையாட்டுப்போட்டி ஒன்று நடந்துகொண்டிருந்தது.
அப்போது, விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுமி ஒருத்தி திடீரென நிலைகுலைந்து சரிந்தாள். சிறிது நேரத்தில் அவளது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
தனியுரிமை கருதி, அவளது மரணத்துக்கான காரணத்தை அவளது குடும்பத்தினர் வெளியிடவில்லை.
ஆரோக்கியமாக இருந்த அந்தச் சிறுமி திடீரென உயிரிழந்ததால், அந்த நகர மக்களும், கால்பந்து குழுவினரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan