Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்குமா...?

ரஷ்யா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்குமா...?

30 ஐப்பசி 2025 வியாழன் 08:18 | பார்வைகள் : 308


உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் பிடிகொடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே கோபத்தில் உள்ளார்.  

இந்த சூழலில், அமெரிக்காவுடன் ரஷ்யா கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை புதின் ரத்து செய்து ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான சட்டதிருத்தத்தில் புதின் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில், புளூட்டோனியம் மேலாண்மை குறித்து  அமெரிக்காவிற்கும் ரஷியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.

இதன்படி ரஷியா தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இவற்றை அணுமின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

அந்த நேரத்தில், இந்த ஒப்பந்தம்மூலம் சுமார் 17,000 அணு ஆயுதங்களின் உற்பத்தியைத் தடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.  2016 இல் அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தபோது புதின் புளூட்டோனியம் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்யும் சட்டதிருத்தத்தில் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்மூலம் ரஷ்யா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

 

வர்த்தக‌ விளம்பரங்கள்