Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் திடீரென நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்

உக்ரைனில் திடீரென நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்

29 ஐப்பசி 2025 புதன் 07:03 | பார்வைகள் : 304


உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு வந்தது.

இதன் ஒரு அணு உலையில், 1986ல் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகவும் மோசமான அணு விபத்தாக கருதப்படும் இதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.


விபத்துக்கு பின், அந்நகரத்தின் சுற்றுபுறங்களில் உள்ள பகுதி, செர்னோபில் விலக்கு மண்டலம் என அறிவிக்கப்பட்டது. இம்மண்டலத்தில், கதிர்வீச்சுக்கு பின் வெளியேறிய மக்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் வசித்து வந்தன.


அதன்படி தற்போது அங்கு, 700 நாய்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கடுமையான கதிர்வீச்சு நிறைந்த மண்டலத்தில் வசிக்கும் இந்நாய்களின் எதிர்ப்பாற்றல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்நாய்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ கவனிப்புகளை, 'டாக்ஸ் ஆப் செர்னோபில்' என்ற அமைப்பின் துணை நிறுவனமான, 'கிளீன் பியூச்சர்ஸ் பண்டு' வழங்கி வருகிறது.

சமீபத்தில், இங்குள்ள நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறியுள்ளன. இந்த நிறமாற்றம் கடந்த வாரம் இல்லை என்றும், கடந்த 39 ஆண்டுகளுக்கு பின் இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்