ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே ஆரம்பமாகும் புதிய கப்பல் பாதை!
28 ஐப்பசி 2025 செவ்வாய் 13:04 | பார்வைகள் : 930
இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடியுள்ளன.
மும்பையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலகவுடன் ஆகியோருக்கு இடையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த புதிய கப்பல் பாதையை திறப்பதன் மூலம் இந்தியா – இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் இந்திய ஊடகம் கூறுகிறது.
அத்துடன் இரண்டு நாட்டு மக்களிடையேயான தொடர்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும் இரண்டு நாட்டு அமைச்சர்களும் பேசியுள்ளதாக தெரியவருகின்மையும் குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan