இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கு வங்கதேசத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு
28 ஐப்பசி 2025 செவ்வாய் 09:33 | பார்வைகள் : 194
சர்ச்சைக்குரிய இந்திய இஸ்லாமிய மத போதகரும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியுமான ஜாகிர் நாயக்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க, வங்கதேச இடைக்கால அரசு தயாராகி வருகிறது.
ஜாகிர் நாயக் என்பவர் ஒரு மருத்துவர். இவர் தன் பணியில் இருந்து விலகி, முஸ்லிம் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தளமாகக் கொண்ட இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மத ரீதியில் மோதல்களை ஏற்படுத்துவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நாயக் தற்போது மலேஷியாவில் வசித்து வருகிறார். இவருக்கு அந்நாடு புகலிடம் அளித்துள்ளது.
இந்நிலையில், மத சொற்பொழிவுக்காக நம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ஜாகிர் நாயக். வரும் நவ., 28 முதல், டிசம்பர் 20ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, வங்கதேசத்தின் இடைக்கால அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஜாகிர் நாயக்கின் முதல் வங்கதேச பயணமாகும்.


























Bons Plans
Annuaire
Scan