Paristamil Navigation Paristamil advert login

Chèque énergie : மோசடிகள் அவதானம்!!

Chèque énergie : மோசடிகள் அவதானம்!!

28 ஐப்பசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 740


மின்சாரம், எரிவாயு, எரிபொருள் போன்ற ‘எரிசக்திகளுக்கான’ கொடுப்பனவுகளில் (Chèque énergie) மோசடிகள் இடம்பெறலாம் எனவும், அது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எரிசக்தி கொடுப்பனவுகள், €48 தொடக்கம் €277 யூரோக்கள் வரை வழங்கப்பட உள்ளது. நவம்பர் 3 ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இதனை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை, இந்த கொடுப்பனவுகளில் ஆண்டுதோறும் 5 மில்லியன் வரையான மக்கள் மோசடிக்குள் சிக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்முறையும் மோசடிக்காரர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி, தொலைபேசி அழைப்பு மூலம் பொதுமக்களை ஏமாற்ற தயாராகியுள்ளதாகவும்,தொலைபேசி அழைப்புக்களில் வங்கி தகவல்கள், ரகசிய இலக்கங்கள், OTP போன்ற விபரங்களை வழங்கவேண்டாம் என எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

chequeenergie. gouv .fr  எனும் அவர்களது இணையத்தளத்தில் “நாம் எவ்வித தொலைபேசி அழைப்புக்களையும் மேற்கொள்ளுவதில்லை!” என காட்சிப்படுத்தியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்