Paristamil Navigation Paristamil advert login

கவிஞர் சினேகனின் தந்தை 101 வயதில் காலமானார்.

கவிஞர் சினேகனின்  தந்தை 101 வயதில்  காலமானார்.

27 ஐப்பசி 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 202


திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவருக்கு 101 வயது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சினேகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமாகி விட்டார் என்ற துயர தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

சினேகன் தந்தை இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், “என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் திரு. சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்