Paristamil Navigation Paristamil advert login

தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி... அச்சத்தில் ரஷ்ய ஜனாதிபதி

தனது  ஆட்சியைக் கவிழ்க்க சதி... அச்சத்தில் ரஷ்ய ஜனாதிபதி

27 ஐப்பசி 2025 திங்கள் 06:57 | பார்வைகள் : 251


ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்னும் அச்சத்திலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு அமைப்பான FSB, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரான Mikhail Khodorkovsky என்பவரும், The Russian Anti-War Committee என்னும் அமைப்பைச் சேர்ந்த 22 பேரும், புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், Khodorkovsky அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

ரஷ்யாவைப் பொருத்தவரை, அதிக வட்டி வீதங்களால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் கடன் அதிகரித்துள்ளதாகவும், thi டெலிகிராப் பத்திரிகை தெரிவிக்கிறது.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யா போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளாததால் அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க, ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் பின்வாங்க, மூன்றரை ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்யா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாகவும், ரஷ்யாவில் பதற்றம் உருவாகியுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்