உடலில் Antioxidant அளவை கணக்கிடும் Samsung Galaxy Watch 8
26 ஐப்பசி 2025 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 133
சாம்சங் நிறுவனம் தனது Galaxy Watch 8-ல் புதிய “Antioxidant Index” அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தொழில்நுட்பம், விரலின் தோலில் உள்ள carotenoid அளவுகளை ஐந்து விநாடிகளில் கணித்து, உடல்நலத்திற்கான உணவுப் பழக்கங்களை மதிப்பீடு செய்ய உதவுகிறது.
இந்த தொழில்துறையில் nutrition index-ஐ அளவிடும் முதல் அம்சமாக இது கருதப்படுகிறது.
Carotenoids என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் இயற்கை நிறமூட்டிகள். மனித உடல் இதனை இயற்கையாக உருவாக்க முடியாது என்பதால், உடலில் உள்ள carotenoid அளவு, நாம் எவ்வளவு பழம் மற்றும் காய்கறி உண்கிறோம் என்பதை பிரதிபலிக்கிறது.
Galaxy Watch 8 இந்த அளவுகளை Very Low, Low, மற்றும் Optimal என மூன்று நிலைகளில் மதிப்பீடு செய்கிறது.
இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான 400 கிராம் பழம் மற்றும் காய்கறி அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
இந்த அம்சம், சிறிய நாணய அளவிலான சென்சாரை பயன்படுத்தி, தோலில் ஒளியின் பரவலை கணித்து, நிகழ் நேரத்தில் தரவுகளை திருத்துகிறது.
விரலில் melanin குறைவாக இருப்பதால், மணிக்கட்டை விட விரல்நுனியில் அளவீடு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், scan செய்யும் போது சிறிது அழுத்தம் கொடுக்கப்பட்டால், hemoglobin-இன் தாக்கம் குறைந்து, அளவீடு துல்லியமாக கிடைக்கும்.
Galaxy Watch 8-ல் இந்த புதிய அம்சத்துடன் sleep tracking, vascular health, stress alerts போன்ற பல உடல்நல அம்சங்களும் உள்ளன. இது உடல்நலத்தை முழுமையாக கணிக்க உதவும் ஒரு முன்னோடியான smartwatch ஆகும்.


























Bons Plans
Annuaire
Scan