தங்க காலணி விருது வென்ற மெஸ்ஸி!
26 ஐப்பசி 2025 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 116
அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி MLS தொடரில் அதிக கோல்கள் அடித்ததற்காக தங்க காலணி விருது பெற்றார்.
MLS கால்பந்து தொடரின் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்வில்லி அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 19 மற்றும் 90+6 நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.
இதன்மூலம் அவரது கோல் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்தவர் மெஸ்ஸிதான்.
இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டது. இந்த சீசனில் மெஸ்ஸி 28 போட்டிகளில் 29 கோல்கள் மற்றும் 19 கோல் உதவிகள் செய்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan