Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தின் முன்னாள் ராணி காலமானார்

தாய்லாந்தின் முன்னாள் ராணி காலமானார்

25 ஐப்பசி 2025 சனி 20:15 | பார்வைகள் : 206


தாய்லாந்தின் முன்னாள் ராணி மற்றும் தற்போதைய மன்னர் மஹா வஜிரலொங்கோர்னின் தாயாருமான ராணி சிரிகிட் கிடியாகரா (Queen Sirikit Kitiyakara) தனது 93 வது வயதில் காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24, 2025) உயிரிழந்ததாக தாய்லாந்து அரச குடும்பம் அறிவித்துள்ளது.

இவரது கணவரும் தாய்லாந்தின் முன்னாள் மன்னருமான பூமிபோல் அதுல்யடிஜ் (King Bhumibol Adulyadej) கடந்த 2016 ஆம் ஆண்டு காலமானார்.

1950 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அவர் ராணியாகப் பதவி வகித்த காலத்தில், சமூக நலன் மற்றும் தாய்லாந்து மக்களின் மேம்பாட்டிற்காக ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.

தாய்லாந்து ராணியின் மறைவுக்குப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ராணி சிரிகிட் மறைவையடுத்து, மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் (ASEAN Summit) தாய்லாந்து நாட்டின் பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்