பாமக செயல்தலைவர் பதவியை மகளுக்கு வழங்கினார் ராமதாஸ்
26 ஐப்பசி 2025 ஞாயிறு 05:31 | பார்வைகள் : 556
பாமக செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக, நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தர்மபுரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பெருமைக்குரிய இந்த மண்ணில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதற்கு தனக்கு தகுதியில்லை என்று அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
செயல் தலைவர் பொறுப்பை பெரிய மகள் ஸ்ரீ காந்திக்கு வழங்குகிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார். எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்து சொல்வோம்.
பாமக என்பது நான் போட்ட விதை, அன்புமணிக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி கூட்டணியை நான் அமைப்பேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
வந்தார் ஸ்ரீ காந்தி; அதிர்ந்தார் அன்புமணி!
குடும்ப பிரச்னையை சமாளிக்க, தன் மகளை அரசியலுக்கு கொண்டு வந்ததுடன், மருமகள் சவுமியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகளை வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்கவும், ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அண்மையில் மகன் அன்புமணிக்கு கட்சி தலைவர் பதவியை பறித்து செயல் தலைவர் பொறுப்பை ராமதாஸ் வழங்கினார்.
தற்போது அந்த செயல் தலைவர் பொறுப்பையும் மகனிடம் பறிந்து மூத்த மகள் ஸ்ரீ காந்திக்கு வழங்கி ராமதாஸ் அதிரடி காட்டி இருக்கிறார். கட்சியில் தனக்கு எதிராக மல்லுகட்டும் மகன் அன்புமணியை, அவருடைய சகோதரியை வைத்தே செக் வைக்கும் திட்டம் தான் இது என, ராமதாசின் செயல்திட்டம் அறிந்த கட்சியினர் கூறுகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan