‘D54’ படத்தின் கதை இதுதானா?
25 ஐப்பசி 2025 சனி 16:56 | பார்வைகள் : 2087
தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வரும் தனுஷ் தற்போது ‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்காலிகமாக D54 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகி வருகிறது.இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து மமிதா பைஜூ, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படமானது 2026 பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது அதன்படி நடிகை மமிதா பைஜூ இந்த படத்தில் கிராமத்து பெண்மணியாக நடிக்கிறாராம். அதேபோல் கே.எஸ். ரவிக்குமாரின் கதாபாத்திரமும் ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும் இந்த படமானது அப்பா மற்றும் மகன் ஆகிய இருவருக்குமான எமோஷனல் கதையாக, பல ட்விஸ்ட்கள் நிறைந்த படமாக உருவாகி வருகிறது என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan