'ஆயிரம் கதை சொல்லும் அபூர்வ நீலம்!' - €18.4 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை!!
25 ஐப்பசி 2025 சனி 12:11 | பார்வைகள் : 2458
நான்கு மீற்றர் நீளமும், இரண்டு மீற்றர் உயரமும் கொண்ட நீல நிற ஓவியம் ஒன்று பரிசில் €18.4 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
நீல நிற ஓவியம் என்றால், அதில் நீலத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. வெறுமனே நீல நிறம் பூசப்பட்ட Monochrom ஆகும். இந்த ஓவியத்தை (??!) 1961 ஆம் ஆண்டில் Yves Klein எனும் ஓவியர் வரைந்துள்ளார். இந்த ஓவியம் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டு, பின்னர் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதியாக இவ்வார வியாழக்கிழமை (ஒக்டோபர் 24) பரிசில் ஏலத்துக்கு விடப்பட்டது.
அது 18.4 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையானது. இந்த தொகை மோனோகிராம் ஓவியம் ஒன்று (ஒற்றை நிறம் கொண்ட ஓவியம்) விற்பனையான அதிகபட்ச தொகையாகும்.
International Klein Blue எனும் ஒருவகை நீல நிறம் கொண்ட ஓவியமாக இது உள்ளது. இந்த ஓவியம் பல கதைகளையும், சிந்தனை மாற்றங்களையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan