கிரிக்கெட் வாய்ப்புக்காக கால்களில் விழுந்தேன் - பிரபல இந்திய வீரர் பகிர்ந்த விடயம்
25 ஐப்பசி 2025 சனி 08:42 | பார்வைகள் : 127
கிரிக்கெட் வாய்ப்புக்காக கால்களில் விழுந்தாக திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் 22 வயதான திலக் வர்மா.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், சமீபத்திய ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், 69 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் தான் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து Breakfast with Champions என்ற தொடரில் பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், "2011 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு பின்னர், நான் கிரிக்கெட்டில் தீவிர கவனம் செலுத்தினேன். இந்தியாவிற்காக கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
நான் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவன். எனது தந்தை எலெக்ட்ரிசியினாக இருந்தாலும் நான் கேட்டு எதையும் அவர் மறுக்கவில்லை. விலை உயர்ந்த பேட்கள் சில சமயங்களில் 4-5 நாட்களில் கூட உடைந்து விடும்.
என் பயிற்சியாளர் சலாம் பயாஸ் (Salam Bayash) சந்தித்த பின்னர் என் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது. அவரது அகாடெமியில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
என் பொருளாதார நிலைமையை அறிந்து, அவரே விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுத்தார். நான் சதம் அடிக்கும் போது, பேட் பரிசு வழங்கி என்னை ஊக்குவிப்பர்.
அவர் என்னிடமிருந்து எந்த கட்டணமும் பெற்றுக்கொள்ளவில்லை. நான் ஒருபோதும் பயிற்சி அமர்வுகளை தவற விட்டதில்லை. அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் பயிற்சி, 40 சுற்று ஓட்டத்திற்கு காய்ச்சல் இருந்தாலும் சென்று விடுவேன்.
நான் பெரிய அளவில் சாதித்து நம்பர் ஒன் வீரராக வருவேன் என்று தெரியும் என என் பயிற்சியாளர் என்னிடம் கூறினார். நான் அப்போது ஹைதராபாத் அணிக்காக கூட விளையாடத் தொடங்கவில்லை.
என்னை பற்றி பலரும் அவரிடம் தவறாக கூறிய போதும் அவர் நம்பவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து என்நான் வீடு மாறி சென்ற போது, மாநில பயிற்சி முகாமிற்கு 2 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. என் தாய் காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பார். ஆனாலும் எனக்கும் பேருந்தில் உட்கார இடம் கிடைக்காது.
நான் வீடு மாறி சென்ற போது, மாநில பயிற்சி முகாமிற்கு 2 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. என் தாய் காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பார். ஆனாலும் எனக்கும் பேருந்தில் உட்கார இடம் கிடைக்காது.
நான் விளையாட ஒரே ஒரு வாய்ப்பு கேட்டு சிலரின் கால்களில் கூட விழுந்துள்ளேன். இது என்னை ஒரு கடினமான மனிதராக மாற்றியது. நான் என் பயிற்சியாளருக்காக நிறைய விடயங்களை செய்துள்ளேன்.இனியும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan