பாகிஸ்தானுக்கு நீரை நிறுத்தும் ஆப்கானிஸ்தான்
25 ஐப்பசி 2025 சனி 08:42 | பார்வைகள் : 223
இந்தியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்த உள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக கருதும் இந்திய அரசு, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்னும் ராணுவ நடவடிக்கை மற்றும் பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் ஒருபகுதியாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது. பாகிஸ்தானில் 20 கோடி பேர் இந்த நீரை நம்பியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை நிறுத்த உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல்போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் இரு நாடுகளும் எல்லையில் மோதிக்கொண்டதில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானும் தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை அணை கட்டி தடுத்து நிறுத்த திட்டமிட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில் உருவாகும் 480 கி.மீ நீளமுள்ள குனார் நதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் இணைகிறது.
இது பாகிஸ்தானில் சித்ரால் நதி என்று அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே பாயும் மிகப்பெரிய நதி ஆகும்.
இந்த குனார் நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு தாலிபான் உச்ச தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார்.
இந்த குனார் நதி நீர் நிறுத்தப்பட்டால், கைபர் பக்துன்க்வா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்கள் கடும் நீர் நெருக்கடியை எதிர்கொள்ளும்.


























Bons Plans
Annuaire
Scan