500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை
24 ஐப்பசி 2025 வெள்ளி 18:54 | பார்வைகள் : 2404
கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.
தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வத்திக்கானுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த பிரார்த்தனை மைக்கேல் அஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்டின் கீழ் உள்ள சிஸ்டைன் சேப்பலில் நடைபெற்றுள்ளது.
ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan