லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்- 4 பேர் பலி
24 ஐப்பசி 2025 வெள்ளி 17:54 | பார்வைகள் : 204
லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் வியாழக்கிழமை 23.10.2025 நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு லெபனானில் உள்ள அரபுசலீம் (Arabsalim) பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக லெபனான் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கும் இடையிலான போர் 2023 ஒக்டோபரில் தொடங்கிய நிலையில், லெபனானை தளமாகக் கொண்ட ஹமாஸ் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பலர் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தபோதிலும், ஹிஸ்புல்லா மீண்டும் ஆயுதங்களைத் தயாரித்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்குடன், அவ்வப்போது அதன் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்குகிறது.
நேற்று அரபுசலீம் பகுதியில் ஹிஸ்புல்லா ஆயுதக் கிடங்கை இலக்காகக் கொண்டு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதங்களில், போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், லெபனானுக்குள் இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
லெபனானுக்கான ஐ.நா.வின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட சர்வதேச அமைப்புகளும் இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்துக் கவலை தெரிவித்துள்ளன. லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan