அட்லி படத்துக்காக சாய் அப்யங்கர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?
24 ஐப்பசி 2025 வெள்ளி 14:29 | பார்வைகள் : 324
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ மற்றும் ‘சித்திரி புத்திரி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்துக்கும் அவர்தான் இசையமைக்கிறார். இந்நிலையில் அவர் இசையமைப்பில் ‘டியூட்’ படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
இதனால் அவரின் ஆரம்பமே வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து அவர் இசையில் படங்கள் வெளியாகவுள்ளன. அவர் இசையமைப்பில் பேன் இந்தியா படமாக அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் பிரம்மாண்டமான ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்துக்கு அவருக்கு சம்பளமாக 6 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஏ ஆர் ரஹ்மானின் சம்பளத்தை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan