மீண்டும் நேட்டோ வான்வெளியை அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்
24 ஐப்பசி 2025 வெள்ளி 12:23 | பார்வைகள் : 737
இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பதிலுக்கு நேட்டோ பால்டிக் விமானப் பொலிசாரின் ஸ்பானிஷ் யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் விரைந்து சென்று அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவ விமானங்கள் லிதுவேனிய வான்வெளியை அத்துமீறி நுழைந்தன. இது சர்வதேச சட்டம் மற்றும் லிதுவேனியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதாகும் என அந்த நாட்டின் ஜனாதிபதி Gitanas Nausėda தெரிவித்துள்ளார்.
ஆனால், லிதுவேனியாவின் வான்வெளியில் எந்த மீறல்களையும் நடத்தவில்லை என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan