Paristamil Navigation Paristamil advert login

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம் உள்ளது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம் உள்ளது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

24 ஐப்பசி 2025 வெள்ளி 10:16 | பார்வைகள் : 155


பெற்றோர் விற்ற சொத்துகள் செல்லாது என அறிவிக்கும் அதிகாரம், 18 வயது நிரம்பிய வாரிசுகளுக்கு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக, அவர்கள் முறைப்படி வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். 1971ம் ஆண்டு, மூன்று மகன்கள் பெயரில் ருத்ரப்பா நிலங்களை வாங்கினார். அதை நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், 1983ல், நீலம்மா என்பவருக்கு விற்றுள்ளார்.

மூன்று மகன்களும், 18 வயதை கடந்த நிலையில், நிலம் விற்கப்பட்டது தெரியாமல், அதை சிவப்பா என்பவருக்கு மீண்டும் விற்றுள்ளனர். இதனால், முதலில் அந்த நிலத்தை வாங்கிய நீலம்மா என்பவர் உரிமை கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விற்பனையை ரத்து செய்வதற்கு வாரிசுகள் வழக்கு தொடர வேண்டுமா, வேண்டாமா? என்பதில் முரண்பட்டு தீர்ப்பு அளித்திருந்தது.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி மித்தல் பிறப்பித்த உத்தரவு:

பெற்றோர் விற்ற சொத்து களை ரத்து செய்யவோ அல்லது அதை வேறு ஒருவருக்கு விற்கவோ, 18 வயது நிரம்பிய வாரிசுகளுக்கு உரிமை இருக்கிறது. இதற்காக, அவர்கள் தனியே வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை.

மூல விற்பனை பற்றி, மைனர்களாக இருக்கும் வாரிசுகள் அறிந்திருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. எனவே, பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்