Paristamil Navigation Paristamil advert login

நீரிழிவு நோய் அதிகரிப்புக்குக் காரணம் என்ன?

நீரிழிவு நோய்  அதிகரிப்புக்குக் காரணம் என்ன?

23 ஐப்பசி 2025 வியாழன் 14:38 | பார்வைகள் : 611


நீரிழிவு நோய் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், மருந்துகளை மட்டுமே சார்ந்திருப்பதுதான் என்று ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கௌதமன் கூறுகிறார்.

பாரம்பரியமாக அரிசியை வடித்து சமைத்தபோது சர்க்கரை நோய் பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், குக்கர் அரிசிக்கு மாறிய பிறகே நோய் பாதிப்பு அதிகரித்தது. இதுபோல், கோதுமையிலும் நார்ச்சத்து நீக்கப்படுவது சிக்கலை ஏற்படுத்துகிறது.

மருந்து, உணவு, நீர், மூச்சுப் பயிற்சி,  தூக்கம் ஆகிய ஆகியவற்றில் கவனம் செலுத்தாததே நோயின் தீவிரத்தை அதிகரிக்கிறது. மேலும், அளவுக்கு அதிகமான எண்ணெய் பயன்பாடும் முக்கிய காரணம்.

வெள்ளை உணவுகள் கெடுதல் என்ற பொதுவான கருத்து தவறு. ஆயுர்வேதத்தின்படி, ஒரு உணவு நல்லதா கெட்டதா என்பது அதை உண்பவரின் வாத, பித்த, கபம் என்ற உடல் அமைப்பை பொறுத்தது. உதாரணமாக, வாத உடலமைப்பு கொண்டவர்களுக்குப் பால் சிறந்தது; கபம் உடலமைப்பு கொண்டவர்கள் பால் சாப்பிடக் கூடாது.

வர்த்தக‌ விளம்பரங்கள்