Paristamil Navigation Paristamil advert login

ஆப்பரேஷன் சிந்தூரால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் மறுக்காது: ராஜ்நாத்

ஆப்பரேஷன் சிந்தூரால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் மறுக்காது: ராஜ்நாத்

23 ஐப்பசி 2025 வியாழன் 12:22 | பார்வைகள் : 103


ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் நொறுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட வலியை இன்றும் அந்நாடு மறக்க முடியாது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

டில்லியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: தற்போதைய காலத்தில் எல்லையில் மட்டும் போர்கள் நடக்கவில்லை. அவை சமச்சீரற்ற வடிவத்தை எடுத்துள்ளன. பாரம்பரிய பாதுகாப்பு பார்வை தற்போதைய காலத்துக்கு உதவாது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும், வலுவான ஆயுதப்படைகளை உருவாக்கவும் மத்திய அரசும் பல விதமான தைரியமான மற்றும் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை எடுத்துள்ளது. அதில் சிறப்புமிக்க நடவடிக்கைகளில் ஒன்று, முப்படை தலைமை தளபதி பதவி. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, முப்படைகளின் ஒருங்கிணைந்தும், கூட்டாக செயல்பட்டதை நாம் பார்த்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை நொறுக்கியது.

இன்றும் கூட அந்நாடு அந்த வலியை மறக்கவில்லை. சிவில் மற்றும் ராணுவத்தை ஒன்றிணைப்பதை சாதாரண ஒருங்கிணைப்பாக மட்டும் பார்க்கக்கூடாது. இந்த நடவடிக்கை இந்தியாவில் தொடர்ச்சியாக நடக்கிறது. பாதுகாப்புத்துறையில் இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. அதில், தனியார் துறையின் பங்களிப்பு ரூ.33 ஆயிரம் கோடி. இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்