கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
22 ஐப்பசி 2025 புதன் 17:59 | பார்வைகள் : 848
கொழும்பு 01 முதல் 15 வரை மற்றும் பல முக்கிய நகரங்களில் நாளை 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 10.00 மணி முதல் அன்றைய தினம் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan