Paristamil Navigation Paristamil advert login

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு- பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும்

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு- பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும்

22 ஐப்பசி 2025 புதன் 12:28 | பார்வைகள் : 115


மகளிர் உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி அரையிறுதிக்கு செல்ல கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி 24ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அரையிறுதிக்குள் நுழைய இப்போட்டியில் இலங்கை அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டும்.

ஆனாலும், சில சிக்கல்கள் இலங்கை அணிக்கு உள்ளன. அதாவது அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

எனவே நான்காவது இடத்திற்கு இலங்கை, இந்தியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

இலங்கை, நியூசிலாந்து அணிகள் தலா 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியுற வேண்டும்.

அதேபோல் லீக்கில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். அதே சமயம் பாகிஸ்தானை மிகப்பெரிய வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தி ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்