விரக்தியுடன் வெளியேறிய இலங்கை வீராங்கனை: தனக்கே தெரியாமல் அவுட் செய்த விக்கெட் கீப்பர்

21 ஐப்பசி 2025 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 119
வங்காளதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில், இலங்கையின் கவிஷா தில்ஹாரி ஸ்டம்பிங் ஆனதால் விரக்தியுடன் வெளியேறினார்.
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டி நவி மும்பையில் நடந்து வருகிறது.
விஷ்மி முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி வெளியேற, அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 43 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
பின்னர் ஹர்ஷிதா 4 ஓட்டங்களில் இருந்தபோது ஷொர்ணா, நிகர் சுல்தானாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
அணியின் ஸ்கோர் 100 ஆக உயர்ந்தபோது, நஹிதா அக்தர் பந்துவீச்சில் கவிஷா தில்ஹாரி (Kavisha Dilhari) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
நஹிதா வீசிய பந்தை கவிஷா அடிக்க தவறவிட, அந்த பந்து விக்கெட் கீப்பர் நிகர் சுல்தானாவின் மேல்பட்டு ஸ்டம்பில் விழுந்தது.
அச்சமயம் கவிஷாவின் கால் கிரீஸுக்கு வெளியே இருந்ததால் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் அவர் விரக்தியுடன் பெவிலியன் திரும்பினார்.