இலங்கை வீராங்கனையும் செய்யாத சாதனையை படைத்த சமரி அதப்பத்து

21 ஐப்பசி 2025 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 120
வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமரி அதப்பத்து புதிய சாதனை படைத்தார்.
நவி மும்பையில் நடந்து வரும் வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாடியது.
அணித்தலைவர் சமரி அதப்பத்து 43 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து அரைசதத்தை தவறவிட்டார். எனினும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களை கடந்தார்.
இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கை வீராங்கனை எனும் வரலாறு படைத்தார்.
120 போட்டிகளில் விளையாடியுள்ள சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 9 சதங்கள், 20 அரைசதங்களுடன் 4045 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஓர் இன்னிங்ஸில் 195 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.