Paristamil Navigation Paristamil advert login

ஹமாசில் தொடரும் தாக்குதல்கள் - யுத்தநிறுத்தம் அமுலில் இருப்பதாக கூறும் ட்ரம்ப்

ஹமாசில் தொடரும் தாக்குதல்கள் - யுத்தநிறுத்தம் அமுலில் இருப்பதாக கூறும் ட்ரம்ப்

21 ஐப்பசி 2025 செவ்வாய் 07:45 | பார்வைகள் : 1308


ஹமாசிற்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட, சில மணித்தியாலங்களின் பின்னர், காசாவில் யுத்தநிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாசும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், யுத்த நிறுத்தம் மீண்டும் உறுதியாக செயல்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

ரஃபாவில் தங்களை குறிவைத்து தீவிரவாதிகள் யுத்ததாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அதில் இரண்டு படைத்தரப்பினர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே, அன்றைய தினம் மாலை, காசா முழுவதிலும் ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 44 பேர் பலியானதாக மருத்துவமனை தரப்பினர் தெரிவிக்கின்றன இந்த நிலை தொடரும் பட்சத்தில் யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், யுத்த நிறுத்த நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அழுத்தம் அவசியம் என அங்கு நிலைகொண்டுள்ள ஊடக நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் இன்று இஸ்ரேலுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026