Snapchat, Zoom, Canva, Airbnb ... போன்ற இணையதளங்கள் உலகம் முழுவதும் முடக்கம்!!

20 ஐப்பசி 2025 திங்கள் 14:07 | பார்வைகள் : 661
அமேசனின் கிளவுட் சேவையான Amazon Web Services (AWS)-ல் ஏற்பட்ட பெரும் பிழையால், உலகம் முழுவதும் உள்ள Snapchat, Signal, Zoom, Slack, Canva, Airbnb, Steam, Fortnite உள்ளிட்ட பல இணையதளங்கள் மற்றும் செயலிகள் அக்டோபர் 20, திங்கள் கிழமை செயலிழந்தன.
Downdetector தரவின் படி, 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; மற்றும் இங்கிலாந்தின் Lloyds, Halifax, Bank of Scotland போன்ற வங்கிகளும் இப்பிரச்சினையில் சிக்கின. Signal மற்றும் Perplexity AI செயலிகளின் நிறுவனர் X தளத்தில் இதை உறுதிப்படுத்தினர்.
அமேசன் தன் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், பிழையின் காரணம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்காலிக சீர்செய்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது. காலை 11:27 மணிக்கே, சேவைகள் சாதாரண நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது, பெரும்பாலான AWS சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.