Paristamil Navigation Paristamil advert login

ஆட்டுக்கால் பாயா!

ஆட்டுக்கால் பாயா!

20 ஐப்பசி 2025 திங்கள் 11:52 | பார்வைகள் : 115


தீபாவளி ஷாப்பிங், பட்டாசு, புத்தாடை அது ஒரு பக்கம் இருந்தாலும் தீபாவளி நாள் அதுவுமா தடபுடலா அசைவ உணவுகள் ரெடி ஆகும். அதுவும் குறிப்பா காலையில பிரம்ம முகூர்த்தத்தில் சாமி கும்பிட்டு, எண்ண குளியல் எல்லாம் குளிச்சு அதுக்கப்புறம், சுடச்சுட இட்லியோட ஆட்டுக்கால் பாயா வச்சு சாப்பிடுற வழக்கம் இன்னும் இருக்கு அந்த ஆட்டுக்கால் பாயாவ ரெசிபி பார்க்கலாம் வாங்க.

மிக்ஸி ஜாரில் சோம்பு சீரகம் மிளகு கசகசா தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை தக்காளி நன்கு வதக்கவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

பிறகு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து லேசாக கிளறி விட்டு வேக வைத்த ஆட்டுக்கால் உங்களை வேகவைத்த தண்ணீரோடு ஊற்றி கொதிக்கவிடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.கொதி வந்ததும் குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும் சூப்பராக ஆட்டுக்கால் பாயா ரெடி இடியாப்பம் தோசை சப்பாத்தி சாதத்திற்கு ஏற்ற ஆட்டுக்கால் பாயா ரெடி.

வர்த்தக‌ விளம்பரங்கள்