Paristamil Navigation Paristamil advert login

கனடா குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பலனடையும் இந்திய வம்சாவளியினர்

கனடா குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பலனடையும் இந்திய வம்சாவளியினர்

25 கார்த்திகை 2025 செவ்வாய் 06:09 | பார்வைகள் : 144


கனடாவின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து, இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு அதிக பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இழப்பு கடந்த 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம், கனடாவில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் ஒரு கனடா குடிமகன், தான் வசிக்கும் வெளிநாட்டில் பிறக்கும் தன் குழந்தைக்கு தானாகவே கனடா குடியுரிமை அளிப்பதை தடுத்தது.

இதனால், வெளிநாட்டில் பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வாழும் கனடா குடியுரிமை பெற்ற பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைகள் தங்களது பாரம்பரிய கனடா குடியுரிமையைப் பெற முடியாமல், குடியுரிமை அற்றவர்களாக அல்லது கனடா குடியுரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் குடியுரிமை இழந்த கனடியர்கள் என்ற ஒரு குழு உருவானது.

இதை யடுத்து, இச்சட்டம் கனடா அரசியலமைப்பில் உள்ள சமத்துவ உரிமைகளுக்கு எதிரானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2023 டிசம்பர் 19ம் தேதி ஒன்டாரியோ உயர் நீதிமன்றம், இந்த கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டத்தின் முக்கிய பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளித்தது.

அறிமுகம் இதையடுத்து, கனடா அரசு இந்த தீர்ப்பை ஏற்பதாகவும், வெளிநாட்டில் பிறந்த கனடியர்களின் குழந்தைகளுக்கு இச்சட்டத்தால் ஏற்படும் பின் விளைவுகள் மோசமானவையாக இருப்பதால் மேல்முறையீடு செய்வதில்லை என முடிவெடுத்தது.

இந்த அநீதியை சரி செய்யவும், நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்கவும், புதிய விதிகளை உருவாக்கவும் மசோதா சி - 3யை கடந்த 2024 மே 27ல் பார்லிமென்டில் கனடா அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்கு 2024 நவம்பர் 24ல் மன்னரின் ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து சி - 3 மசோதா சட்டமானது. இச்சட்டம் வருகிற 2026 ஜனவரியில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய சட்ட விதிகளின் கீழ், சர்வதேச அளவில் பணிபுரியும் அல்லது வாழும் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் நேரடியாக பாதிக்கப்ப ட்டனர்.

தற்போதைய புது சட்டத்தின்படி, இந்திய வம்சாளியினர் அதிகளவில் பயனடைவர் என கூறப்படுகிறது.

இதன் வாயிலாக கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டில் பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான ஒரு உறுதியான வழி பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்