2025 கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கும் தேதி அறிவிப்பு!!
24 கார்த்திகை 2025 திங்கள் 21:46 | பார்வைகள் : 210
1998ல் லயனல் ஜோஸ்பின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் போனஸ் (Prime de Noël), குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையாக தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இது டிசம்பர் 16 முதல் 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தானாகவே வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும்.
கடந்த ஆண்டு தொகைகள் ஒருவருக்கு 152 யூரோக்களும், குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு 228 யூரோக்களும், இரண்டு குழந்தைகள் உள்ள தம்பதிகளுக்கு 320 யூரோக்களுமாக இருந்தன, ஆனால் இந்த ஆண்டிற்கான தொகைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2026 பட்ஜெட்டில் இந்த போனஸை குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கும் முயற்சி முன்மொழியப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குள்ளாகியது. தொழில்துறை அமைச்சர் ஜான்-பியர் ஃபராண்டூ, நாட்டின் பொருளாதார நிலை காரணமாக உதவித்தொகைகளில் «மறுவழிவகை» தேவைப்படலாம் என்று கூறியுள்ளார். எனினும், முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் சேர்க்கப்படாவிட்டால் அடுத்த ஆண்டு இது அமலுக்கு வராது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan