Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் யோகட் பானம் அருந்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 கனடாவில் யோகட் பானம் அருந்துபவர்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

24 கார்த்திகை 2025 திங்கள் 16:48 | பார்வைகள் : 128


கனடாவில் பிரபல யோகட் பானமான யோப்லாயிட் யோப் Yoplait YOP தயாரிப்புகள் சிலவற்றில், பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், கனடிய உணவு ஆய்வு அமைப்பு திரும்ப் பெறும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பேக்கேஜ் கூறுகளில் உள்ள குறைபாட்டால் தயாரிப்பில் பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த சுய விருப்ப அடிப்படையிலான மீளப் பெறல் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

200 மில்லி லீற்றர் அளவு கொண்ட புளூபெரி, ஸ்ட்ரோபெரி, ஸ்ட்ரோபெரி–வாழை, பர்த்டே கேக், வனில்லா, வாழை, ராஸ்ப்பெரி, பீச், மந்தரின்,ட்ராபிக்கல், பிளாக்பெரி–ஸ்டார்ஃப்ரூட், லாக்டோஸ் ஃப்ரீ ஸ்ட்ரோபெரி–ராஸ்ப்பெரி, லாக்டோஸ் ஃப்ரீ மாம்பழம் போன்ற பானங்கள் இவ்வாறு மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பான வகைகளினால் இதுவரையில் யாருக்கும் உடல் நலப் பிரச்சினைகள் எற்பட்டதாக தெரியவரவில்லை எனவும் எச்சரிக்கை அடிப்படையில் பானங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்