Paristamil Navigation Paristamil advert login

ஏமனில் உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை

ஏமனில் உளவு பார்த்ததாக 17 பேருக்கு மரண தண்டனை

24 கார்த்திகை 2025 திங்கள் 09:02 | பார்வைகள் : 1134


இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான இரண்டு வருடப் போரின் போது ஹமாசுக்கு ஆதரவளித்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் நடவடிக்கையில் பல ஹவுதி போராளிகள் உயிரிழந்தனர்.

போரின் போது இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட பலரை ஹவுதி அமைப்பினர் கடந்த நாட்களில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்திய ஹவுதி கட்டுப்பாட்டிலுள்ள நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, குறித்த 17 பேரையும் சுட்டுக்கொன்று தண்டனையை நிறைவேற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்ப்பு, ஏமனின் உள்நாட்டு நிலைமை மற்றும் பிராந்திய உறவுகளை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்