Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற வானிலை தொடர்கிறது!!

சீரற்ற வானிலை தொடர்கிறது!!

24 கார்த்திகை 2025 திங்கள் 07:29 | பார்வைகள் : 151


இன்று நவம்பர் 24, திங்கட்கிழமை நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும் எனவும், பனிப்பொழிவு, மழை, வெள்ளம், இடி மின்னல் தாக்குதல் மற்றும் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

 Dordogne, Corrèze மற்றும் Gironde ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ’வெள்ள’ அனர்த்தம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து, வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் நுழையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு எல்லை ஓர மாவட்டங்களான Corse-du-Sud and Haute-Corse, Manche, Finistère, Charente-Maritime, Gironde, Landes and Pyrénées-Atlantiques  ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, Côtes-d'Armor, Finistère, Haute-Garonne, Gers, Manche, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு கடும் புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்