Paristamil Navigation Paristamil advert login

வெனிசுலாவில் புதிய திட்டம் - ட்ரம்ப் அறிவிப்பு

 வெனிசுலாவில் புதிய திட்டம் -  ட்ரம்ப் அறிவிப்பு

24 கார்த்திகை 2025 திங்கள் 08:02 | பார்வைகள் : 101


அமெரிக்காவின் வெனிசுலாவின் தலைநகரின் மீது துண்டுப் பிரசுரங்களை வீச அமெரிக்க இராணுவத்தினருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் மதுரோவின் கைது மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு வெகுமதிகள் வழங்குவது உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய துண்டுபிரசுரங்களை அந்நாட்டின் தலைநகரின் மீது வீச முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்