Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோனின் செயற்பாடுகளில் - 16% சதவீத மக்கள் மட்டுமே திருப்தி!!

ஜனாதிபதி மக்ரோனின் செயற்பாடுகளில் - 16% சதவீத மக்கள் மட்டுமே திருப்தி!!

23 கார்த்திகை 2025 ஞாயிறு 15:04 | பார்வைகள் : 168


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீதான நன்மதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளமை அறிந்ததே. தற்போது மேற்கொள்ளப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்ரோனின் செல்வாக்கு மேலும் மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

16% சதவீத மக்கள் மட்டுமே மக்ரோன் மீது நன்மதிப்பு கொண்டுள்ளனர். இது 2017 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியானதில் இருந்து பெறும் மிகக்குறைந்த நன்பதிப்பு புள்ளியாகும். 2017 ஆம் ஆண்டில் அவர் 17% சதவீத நன்மதிப்பினைக் கொண்டிருந்தார்.

அதேவேளை, பிரதமர் Sébastien Lecornu, 34% சதவீத நன்மதிப்பினைக் கொண்டுள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பினை JDD ஊடகத்துக்காக Ifop நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 2,000 பேர் பங்கேற்றிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்