Paristamil Navigation Paristamil advert login

Sheinஐ தடை செய்ய கோரும் 80-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!!

Sheinஐ தடை செய்ய கோரும் 80-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!!

23 கார்த்திகை 2025 ஞாயிறு 14:31 | பார்வைகள் : 132


80-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆசிய ஆடை தளமான ஷெயினை (Shein) தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். ஷெயின் "பொய்யான மரியாதை முகமூடியை" அணிந்து கொண்டாலும், அது சூழலை, வேலைவாய்ப்புகளை மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்தை ஆபத்துக்குள் இட்டு செல்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

BHV-யில் நவம்பர் தொடக்கத்தில் Shein நிறுவனம் நிறுவியதைத் தொடர்ந்து, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஷெயினின் நேர்மையற்ற போட்டி, நச்சுப் பொருட்கள் விற்பனை, மற்றும் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் முறைகளை கடுமையாக விமர்சிக்கின்றனர். இதனால் தேசிய சபையின் நிலையான வளர்ச்சி குழு,  Shein நிறுவன தலைவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

ஷெயின் நிர்வாகிகள் நவம்பர் 26-ஆம் திகதிக்குத் திட்டமிடப்பட்டிருந்த விசாரணையைத் தவிர்த்து, இப்போது டிசம்பர் 2-ஆம் திகதி ஆஜராக உள்ளனர். குழந்தைபயை போன்ற தோற்றமுள்ள செக்ஸ் பொம்மைகள் மற்றும் "வகை A" ஆயுதங்கள் விற்பனையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிஸ் நீதிமன்றம் Shein தளத்தை பிரான்சில் இடைநிறுத்த வேண்டுமா என தீர்மானிக்கவுள்ளது. இதற்கு இணையாக, பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில ஆன்லைன் தளங்களுக்கு கடுமையான விதிகள் வைக்க வேண்டும் என ஐரோப்பிய தீர்மானத்தை முன்வைத்துள்ளனர். 

ஷெயின் நிறுவனம் இவ்வருடத்தில் மட்டும் 191 மில்லியன் யூரோக்கள் அபராதம் பெற்றதையும் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்