Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவில் கட்டளைக்குக் காத்திருக்கும் ஹமாஸ் படைகள்- இஸ்ரேல் எச்சரிக்கை

 ஐரோப்பாவில் கட்டளைக்குக் காத்திருக்கும் ஹமாஸ் படைகள்- இஸ்ரேல் எச்சரிக்கை

23 கார்த்திகை 2025 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 133


ஹமாஸ் படைகள் ஐரோப்பா முழுவதும் ஒரு செயல்பாட்டுக் குழுவை வளர்த்து, இரகசியப் பிரிவுகள் மூலம் செயல்படுவதாக இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

மொசாட் உளவுத்துறைக்கு ஐரோப்பிய பாதுகாப்பு சேவைகளுடனான ஒத்துழைப்பு காரணமாக ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதற்கும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும், திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுப்பதற்கும் வழிவகுத்தது என அறிக்கை ஒன்றில் மொசாட் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலிய மற்றும் யூத சமூகங்களை இலக்காகக் கொண்ட சதித்திட்டங்களை சீர்குலைக்க ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்புகள் உதவியதாகவும் மொசாட் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கூட்டு நடவடிக்கைகளின் விளைவாக பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக கட்டளையின் பேரில் பயன்படுத்த தயாராக இருந்த ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் மொசாட் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டம்பரில் ஆஸ்திரியாவின் DSN பாதுகாப்பு சேவை கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் அடங்கிய ஆயுதக் குவியலைக் கண்டுபிடித்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதில் முகமது நைம் என்பவருக்கு தொடர்பிருப்பதை உறுதி செய்யப்பட்டது.

ஹமாஸ் படைகளின் அரசியல் துறையின் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நைமின் மகன் இவர். காஸாவில் உள்ள மூத்த ஹமாஸ் தலைவரான கலீல் அல்-ஹய்யாவுடன் நெருக்கமாகப் பழகுபவர் பாஸ்ஸெம் நைம்.

வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைமை இந்த முயற்சிகளை அமைதியாக முன்னெடுத்து வருவதாக மொசாட் குற்றம் சாட்டியது.

ஆனால், சர்வதேச நாடுகளில் ஹமாஸின் பிம்பத்தை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இப்படியான நிகழ்வுகளின் எந்தவொரு தொடர்பையும் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பகிரங்கமாக மறுத்து வருகின்றனர்.

மூத்த தலைவர்களின் தொடர்ச்சியான மறுப்பு, தீவிரமான செயல்பாட்டாளர்கள் மீதான தலைமையின் கட்டுப்பாட்டை இழப்பதைக் குறிக்கும் என்றும் மொசாட் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய உளவுத்துறை சேவைகள் நேரடி பாதுகாப்பு தலையீடுகளுக்கு அப்பால் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படைகளின் இதுவரையான வரலாற்றில், பாலஸ்தீனத்தைக் கடந்து தாக்குதல் நடத்தியதற்கான சான்றுகள் இல்லை என்பதுடன், இஸ்ரேலின் இராணுவம் லண்டனிலும் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது என்பது மறுப்பதற்கு இல்லை என மூத்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்