பங்களாதேஷில் மீண்டும் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
23 கார்த்திகை 2025 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 103
பங்களாதேஷ் நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு 22.11.2025 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பெரியளவில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, பங்களாதேஷில் நேற்று காலை ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன.
மேலும், 9 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்நுள்ளநிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan