Paristamil Navigation Paristamil advert login

அமேசான் வனச்சூழல் அழிவுக்கு நிதியளித்ததாக பிரெஞ்சு வங்கிகள் மீது குற்றச்சாட்டு !!

அமேசான் வனச்சூழல் அழிவுக்கு நிதியளித்ததாக பிரெஞ்சு வங்கிகள் மீது குற்றச்சாட்டு !!

22 கார்த்திகை 2025 சனி 20:35 | பார்வைகள் : 159


அமேசான் வனச்சூழல் அழிவுக்கு நிதி வழங்கியதாக, COP30 நடுவில் பிரெஞ்சு வங்கிகள் BNP Paribas, BPCE, Crédit Agricole மற்றும் Société Générale மீது Reclaim Finance மற்றும் Canopée ஆகிய அரசு அல்லாத அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. 

மேற்குறிப்பிட்ட வங்கிகள் பிரேசிலில் அமேசான் காடுகளை வெட்டிய விவசாயிகளிடமிருந்து சோயா வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட Bunge மற்றும் Cargill நிறுவனங்களுக்கு,

2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை  10 பில்லியன் டாலர் பணப் பரிவர்த்தனைகள்  நடைபெற்றதாக அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டி உள்ளது.

இதற்கிடையில், பிரெஞ்சு வங்கிகள் அனைத்தும் “பூஜ்ஜிய வனச்சூழல் அழிவு” கொள்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்தாலும், ONG-கள் அவற்றின் உறுதிமொழிகள் பலவீனமாக உள்ளன என விமர்சித்துள்ளன. COP30 நடைபெறும் நேரத்தில் வரும் இந்த குற்றச்சாட்டுகள், அமேசான் காடுகள் இன்னும் பெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன. 

Reclaim Finance மற்றும் Canopée, வங்கிகள் வனச்சூழல் அழிவில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை நிறுத்தி, உண்மையான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளன.

"COP 30" என்பது 1992 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சர்வதேச ஒப்பந்தம் மற்றும் 2015 பரிஸ் ஒப்பந்தத்தின் தாய் ஒப்பந்தமான, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கட்சிகளின் மாநாட்டின் (COP) 30வது அமர்வைக் குறிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்