2026 பாதீட்டு தள்ளுபடி - அரசாங்க இராஜினாமா-நாடாளுமன்ற கலைப்பு கோரிக்கை!
22 கார்த்திகை 2025 சனி 18:14 | பார்வைகள் : 141
2026 ஆம் ஆண்டிற்கான பிரெஞ்சு அரசின் நிதியாண்டு வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேசியப் பேரணியின் (RN) தலைவி மரின்-லூ-பென் பிரான்ஸ் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்றும் , நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய நிகழ்வுகள்:
நவம்பர் 21-22 இரவு நாடாளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட நிதியாண்டு வரவு செலவுத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
404 உறுப்பினர்கள் எதிர்ப்பு வாக்குகள் (ஒரே ஒரு ஆதரவு வாக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் முழு திட்டமும் மேலவைக்கு அனுப்பப்படும்
அரசியல் நிலைப்பாடுகள்:
மரின்-லூ-பென்: 'அரசாங்கம் பதவி விலகி, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்'
இடதுசாரிக் கட்சிகள்: ஒருமனதாக எதிர்ப்பு
அரசு கூட்டணி: பிளவு - எதிர்ப்பு மற்றும் வாக்கெடுபபில் கலந்துகொள்ளாமை
வரலாற்று முக்கியத்துவம்:
முதன் முறையாக நிதியாண்டு வரவு செலவுத் திட்டம் இந்த அளவு ஒருமித்த எதிர்ப்பை சந்தித்துள்ளது. வரவு பகுதி நிராகரிக்கப்பட்டதால், செலவு பகுதி கூட விவாதிக்கப்படவில்லை.
அடுத்த கட்ட நடவடிக்கைகள்:
நிதியாண்டு திட்டம் இப்போது மேலவைக்கு (Sénat) அனுப்பப்படும்
அரசியல் நெருக்கடி மோசமடையும் சாத்தியம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மக்ரோன் முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும்
இந்த நிராகரிப்பு, பிரெஞ்சு அரசியலில் தொடர்ந்து நீடிக்கும் அரசியல் முறுகல் நிலையை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan