கார்ட் (Kard) செயலி திவால் : பெற்றோரின் கைக்காசை மீட்பதில் சிரமம்!!
21 கார்த்திகை 2025 வெள்ளி 21:12 | பார்வைகள் : 190
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வங்கி மூலம் கைக்காசை வழங்க அனுமதித்த கார்ட் (Kard) செயலியின் வாடிக்கையாளர்கள், செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் திவாலானதிலிருந்து தங்கள் பணத்தை மீண்டும் பெற முடியாது எனக் கவலைப்படுகின்றனர். Kard வழங்கிய வங்கி அட்டை மூலம், பெற்றோரின் கண்காணிப்பில் பிள்ளைகள் சிறு செலவுகளை செலுத்த முடிந்தது.
வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள முடியாததால் பெற்றோருக்கு குழப்பம் அதிகரித்துள்ளது. சிலர் திவாலை பற்றி அறியாமல் பணம் செலுத்தியுள்ளனர், ஆனால் அந்த தொகைகள் செயலியில் தோன்றவில்லை.
இருப்பினும், Kard பயன்படுத்திய Crédit agricole குழுமத்தின் துணை நிறுவனம் Okali வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பாக உள்ளதாக உறுதி செய்துள்ளது. பணம் Kard உடன் மறைந்துவிடவில்லை; வாடிக்கையாளர்கள் Okali-யை அவர்கள் வெளியிட்ட மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பணத்தை மீட்டெடுக்கலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan