டுபாய் விமான கண்காட்சியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான இந்தியா விமானம்
21 கார்த்திகை 2025 வெள்ளி 13:00 | பார்வைகள் : 173
டுபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
டுபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) ஆரம்பமானது. இதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன.
இந்நிலையில் விமான கண்காட்சியின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கண்காட்சியில் ஆயிரக்காணக்கான மக்கள் சாகசத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ் விமானம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவத்தால் தயாரிக்கப்படும் மிக முக்கியமானது எனக் கூறப்படுகிறது. இது மணிக்கு 2200 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்லக் கூடியது.
மேலும் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்படவும், அதில் தரையிறங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்த Brampton நகரம்!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan