வியட்நாமில் கன மழை - 41 பேர் பலி
21 கார்த்திகை 2025 வெள்ளி 08:19 | பார்வைகள் : 167
வியட்நாமின் மத்திய மாகாணங்களில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் மேலும் ஒன்பது பேர் காணாமற்போயுள்ளனர்.
மத்திய பகுதி முழுவதும் கடந்த மூன்று நாட்களில் 150 சென்றி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
52,000-க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன, 62,000 பேர் அவசரமாக இடம்பெயர்த்துள்ளனர்.
பல முக்கிய சாலைகள் மண்சரிவால் மூடப்பட்டுள்ளன, 10 லட்சம் வாடிக்கையாளர்கள் மின்வினியோகமின்றி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
லாம் டோங் மாகாணத்தில் டா நிஹம் ஆற்றின் மேல் அமைந்திருந்த ஒரு தூக்குப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரை சுற்றுலா தலமான ந்யா ட்ராங் நகரத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் நீரில் மூழ்கிய படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தேசிய வானிலை துறை, வெள்ளப்பெருக்கு மற்றும் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை வரையிலும் கனமழை தொடரும் எனவும் எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan